Posted by plotenewseditor on 6 April 2025
Posted in செய்திகள்
தமிழ்நாடு இராமேஸ்வரத்தில் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலமான புதிய பாம்பன் பாலம் இன்று பிற்பகல் இந்தியப் பிரதமர் நரேந்திரத மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்திய மதிப்பில் சுமார் 700 கோடி ரூபாய் செலவில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கடல் மேல் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தின் 72.5 மீட்டர் நீளமுள்ள பகுதியை தூக்கி, அதன் கீழ் கப்பல்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி 17 மீற்றர் உயரத்திற்கு தூக்கப்படும் வகையில் கட்டப்பட்டுள்ளது. Read more