திருகோணமலைக்கு விஜயம் செய்த ஐ.நா. அதிகாரியின் வதிவிடப் பிரதிநிதி Marc-André Franche மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் திருகோணமலை மாநகரசபை பெண் வேட்பாளர் திருமதி இ.வசந்தினி ஆகியோரிடையே முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று 05/04/2025 அன்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, எதிர்வரும் தேர்தலின்போதான முறையான நடத்தை, வாக்காளர் உரிமைகள், சமச்சீரான தேர்தல் சூழ்நிலை போன்ற விடயங்களுடன், தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், சமூகத்தில் பெண்கள் எதிர்நோக்கும், அரசியல் பங்கேற்பில் உள்ள தடைகள், மற்றும் அவர்களுக்கு தேவைப்படும் ஆதரவு அம்சங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
இச்சந்திப்பு, மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தையும், பெண்களின் அரசியல் பங்கேற்பை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயத்தையும் வலியுறுத்தும் வகையில் இடம்பெற்றது.