இஸ்ரேலுக்கு எதிராகச் சுவரொட்டி ஒட்டிய குற்றச்சாட்டில் கைதாகித் தடுப்புக் காவலில் இருந்த ருஷ்தி என்ற இளைஞர் பிணையில் விடுவிக்கப்பட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், இன்று அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது அவரை பிணையில் விடுவிக்கவும், மாதாந்தம் அவர் காவல் நிலையம் ஒன்றில் கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.