திருகோணமலை மாவட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் போட்டியிடுகின்ற உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்களினது அறிமுக நிகழ்வு 06.04.2025 அன்று மாலை 03.00 மணியளவில் உப்புவெளியில் அமைந்துள்ள சுவர்க்கா விடுதியில் நடைபெற்றது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மாவட்ட இணைப்பாளரான திரு. தி. பிரபாதரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர்களான திரு.அ.அடைக்கலநாதன், திரு.க.பிரேமச்சந்திரன் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் திரு.நா.இரட்ணலிங்கம்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் திரு. ந. சிவசக்தி (ஆனந்தன்) ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் மாவட்டச் செயலாளர் திரு. பிருந்தநாத், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட மகளிர் பிரிவுத் தலைவர் திருமதி. இ.வசந்தினி ஆகியோர் உள்ளிட்ட பல அமைப்புகளின் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்ததோடு இதில் பலரும் உரை நிகழ்த்தியிருந்தனர்.

அத்துடன் இம்முறைத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட, திருகோணமலை மாநகரசபை திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை குச்சவெளிப் பிரதேச சபை வெருகல் பிரதேச சபை ஆகியவற்றில் கூட்டணியின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களினது அறிமுக நிகழ்ச்சியும் இடம்பெற்றது.