Header image alt text

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் இன்று மாலை அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் தற்போது கொழும்புக்கு அழைத்துவரப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கையூட்டல் பெறுவதற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. Read more

தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மாஅதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான குழுவை நியமிக்கும் பிரேரணை இன்று(08) பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 151 வாக்குகள் அளிக்கப்பட்டன.

மாத்தறை தேவேந்திரமுனை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் துப்பாக்கிதாரி உள்ளிட்ட இருவர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தேவேந்திரமுனை பகுதியில் கடந்த 21 ஆம் திகதி இரவு உந்துருளியில் பயணித்த இருவரை இலக்கு வைத்து வேன் ஒன்றில் பிரவேசித்த தரப்பினர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர். Read more

அரச துறையில் 30,000 பேரை ஆட்சேர்ப்பு செய்யும் திட்டத்தின் கீழ் 18,853 பட்டதாரிகள் மற்றும் இளைஞர், யுவதிகளை ஆட்சேர்ப்பு செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரச சேவையில் பல்வேறு நிறுவனங்களில் பணிக்குழாமினரை மீண்டும் மீளாய்வு செய்து, அத்தியாவசிய ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காக விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்குப் பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. Read more

கட்டுநாயக்க 18 ஆம் கட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கட்டுநாயக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 50 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊவா மாகாண சபையின் 6 கணக்குகளின் நிலையான வைப்புகளை முதிர்வு காலம் நிறைவடைவதற்கு முன்னர் நீக்கப்பட்டமை தொடர்பான வழக்கிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். Read more