Header image alt text

தற்போது கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் போன்றோர் கிழக்கு மாகாணத்துக்காக எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்வைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றில் கருத்துரைத்த அவர், கடந்த காலங்களில் பல தமிழ் புத்திஜீவிகள் காணாமல் போன சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாகக் கருதி பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். Read more

இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், தற்போதைய அரசாங்கம் இரண்டு முன்னுரிமை விடயங்களைக் கருத்திற் கொண்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் வைத்துத் தெரிவித்தார். அரசாங்கம், பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதிலும், தாமதமான தேர்தல்களை நடத்துவதன் மூலம் நாட்டில் ஜனநாயகத்தை உறுதி செய்வதிலும் முழுமையாகக் கவனம் செலுத்தியதாகப் பிரதமர் கூறினார். Read more

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் களனி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மில்ரோய் பெரேரா ஆகியோரைக் கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தொடர்ந்தும் தலைமறைவாகியுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு வவுணதீவு பகுதியில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் விசாரணைகளைத் தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டின் பேரில் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கரடியனாறு பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று அவர் மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாதன் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. Read more

2025 – 2029 தேசிய ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று(09) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ, சட்ட மாஅதிபர் பாரிந்த ரணசிங்க, மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமும் மேல் நீதிமன்ற நீதிபதியுமான ரங்க திசாநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர். Read more

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 11 ஆம் திகதியுடன் நிறைவடையும். முதலாம் தவணையின் 3 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகி, மே மாதம் 9 ஆம் திகதி வரை நடைபெறும் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார் தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகைதந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.