Header image alt text

உள்ளூராட்சி தேர்தலுக்காக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சமர்ப்பித்து நிராகரிக்கப்பட்ட 11 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 10 உள்ளூராட்சி மன்றங்களுக்கும், மன்னாரில் மாந்தைக்குமாக 11 உள்ளூராட்சி மன்றங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான மெட்டா நிறுவனம் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு பேஸ்புக் மெசேஜர்  இன்ஸ்டாகிராம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பெற்றோர்கள் தங்களின் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கணக்குகளை நேரடியாக மேற்பார்வையிடக் கூடிய வசதிகளை அளித்துள்ளது. Read more

ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 15, 16, 17 ஆம் திகதிகளில் நிறுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு நாள் மற்றும் வழமையான சேவைகளை வழங்குவதற்கான துண்டு சீட்டுகள் குறித்த நாட்களில் நண்பகல் 12 மணிவரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

250 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் திட்டமிட்டபடி மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நீதிமன்றத்தால் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விசாரணைக்குப் பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு காவல்துறையினரால் வழங்கப்படும் தண்டப்பணத் தொகையை இணையவழி மூலம் செலுத்துவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். அதன்படி இந்த கொடுப்பனவுகளை GovPay செயலி மூலம் செலுத்த முடியும் என அவர் தெரிவித்தார். Read more

தேஷபந்து தென்னக்கோனை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேஷபந்து தென்னக்கோனை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுவிக்குமாறு மாத்தறை நீதவான் அருண புத்ததாச உத்தரவிட்டுள்ளார். Read more

சுற்றுலா விசாவில் இலங்கையில் தொழிலில் ஈடுபட்டிருந்த பல வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார். அவ்வாறான வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுற்றுலாப் பயணிகளை கைது செய்வதற்கான முயற்சியின் போது, அவர்களுக்கு சொத்துகளை வாடகைக்கு வழங்கியிருந்த உள்ளூர் பிரஜைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைத்துப்பாக்கி மற்றும் 12 தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பகுதியில் கடமையில் இருந்த அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (09) இரவு இந்த நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more

அச்சுவேலியில் இருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கிச் செல்கின்ற அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வீதி இன்று காலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. அந்த வீதியில் பயணிப்பதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இராணுவக் குடியிருப்பினூடாகச் செல்லும் இந்த வீதியில் பயணிக்கும் அனைவரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுதல் வேண்டும் என கோரப்பட்டுள்ளது. Read more