நாளை(13) முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை பகல் வேளையில் வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கலங்களை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு இலங்கை மின்சார சபை பாவணையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மின்சார கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. Read more
		    
சிவனேசதுரை சந்திரகாந்தனை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர். மட்டக்களப்பில் கடந்த 8 ஆம் திகதி இரவு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டார். நபரொருவர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டார். 
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நாளையும் (13) – நாளை மறுதினமும் (14) சிறைக்கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. கைதி ஒருவருக்கு போதுமான திண்பண்டங்கள், உணவு, சுகாதார பொருட்கள் அடங்கிய பொதியை மாத்திரமே உறவினர்கள் கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டது.