பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்படவுள்ள குழுவிற்கு உறுப்பினர்களை பெயரிடுமாறு சபாநாயகர் ஊடாக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மூவரடங்கிய இந்தக் குழுவை நியமிப்பதற்கான பரிந்துரை பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. Read more
		    
இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் 24 மணித்தியால அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சமுத்திர பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 106 எனும் அவசர எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 20ஆம் திகதியின் பின்னர் வௌியிட தீர்மானித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்தது. ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சை பெறுபேறுகளை வௌியிட ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.