முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை உதய கம்மன்பில சந்தித்துள்ளார். அவரது சட்டத்தரணி என்ற வகையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தற்போது 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்திக்க வேண்டுமென சட்டத்தரணி உதய கம்மன்பில முன்னதாக திணைக்களத்திற்கு அறிவித்திருந்தார். Read more
பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி சிறிதன் தம்மிக்க சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இவர் கைது செய்யபட்டுள்ளார். போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்தின் பெங்கொக் நகரை நோக்கிச் செல்ல முற்பட்ட போதே இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்தனர்.
கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால்மூல வாக்கெடுப்பு தாமதமாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது. குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்காக எதிர்வரும் மே 06 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுவதைத் தடுத்து பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவினால் தபால்மூல வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழு அறிவித்தது.