உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தைத் தேசிய மக்கள் சக்தி முழுமையாகக் கைப்பற்றுமாக இருந்தால் அந்த மாவட்டத்தை எவராலும் காப்பாற்ற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். Read more
		    
யாழ்ப்பாணம் – குருநகர் கடற்கரை பகுதியில் இருந்து T56 ரக துப்பாக்கி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு நேற்று கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே துப்பாக்கி மீட்கப்பட்டது. அத்துடன் 5 தோட்டாக்களும் 10 வெற்று மெகஸின்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் துருப்பிடித்து பாவிக்க முடியாத நிலையில் உள்ளதாக பொலிஸார் கூறினர். 
சீனாவில் தயாரிக்கப்பட்ட 84எஸ் ரக துப்பாக்கி, 2 மெகசின்கள் மற்றும் 46 தோட்டாக்களை வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்தேகொட பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த நபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அலன்டீலன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆ.யு.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் 16 சிறார்களை முறைக்கேடாக நடத்திய குற்றச்சாட்டில் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் அங்கத்தவரான அலன்டீலனை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநீக்கம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.