உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தைத் தேசிய மக்கள் சக்தி முழுமையாகக் கைப்பற்றுமாக இருந்தால் அந்த மாவட்டத்தை எவராலும் காப்பாற்ற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் மன்னாருக்கு விஜயம் மேற்கொள்வதானது, இங்குள்ள வளங்களைக்கொண்டு பணம் ஈட்டுவதற்காகவே என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.