எமது வவுனியா மாநகரின் உரிமைக்கான அடையாளம் மாற்றப்பட்டு இருக்கிறது. வர்த்தமானியில் சிங்கள மொழியில் වව්රනියා’ව’ (வவுனியாவ) என மாநகரின் பெயர் குறித்து வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளும் தரப்பு தேர்தலை குறிவைத்து செயற்படுவதை தமிழ் மக்கள் இன்னும் புரிந்து கொள்ளாமல் அவர்களுக்கு பின்னால் அலைவது எம்மை வெட்கி தலைகுனிய வைத்துள்ளது.