எமது வவுனியா மாநகரின் உரிமைக்கான அடையாளம் மாற்றப்பட்டு இருக்கிறது. வர்த்தமானியில் சிங்கள மொழியில் වව්රනියා’ව’ (வவுனியாவ) என மாநகரின் பெயர் குறித்து வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளும் தரப்பு தேர்தலை குறிவைத்து செயற்படுவதை தமிழ் மக்கள் இன்னும் புரிந்து கொள்ளாமல் அவர்களுக்கு பின்னால் அலைவது எம்மை வெட்கி தலைகுனிய வைத்துள்ளது.

இந்த அரசு தமிழ் பகுதிகளில் பேரினவாத போக்கை கடைப்பிடிக்கவில்லை என்றால் உடனடியாக 3 மொழிகளிலும் திருத்தப்பட்ட வர்த்தமானியை NPP வவுனியா மாநகர சபை என வெளியிடட்டும்.
சிங்கள மொழியிலும் වව්රනියා என பெயர் குறித்து வெளியிடட்டும். இது வட மாகாணத்தின் பிரதி நிதிகள் போல் பாசாங்கு செய்யும் அமைச்சர் , பிரதி அமைச்சர் , 5 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சவால்.
என்றும் மக்கள் சேவையில்
சுந்தரலிங்கம் காண்டீபன்