Header image alt text

18.04.2016ல் மரணித்த மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் தோழர் சிங்கம் (பெனடிக்ட் தனபாலசிங்கம்) அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் இன்று….   யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வதிவிடமாகவும் கொண்ட இவர் தனது இளம் பராயத்திலேயே சமூக சேவைகளில் அதிக நாட்டம் கொண்டிருந்தார்.

Read more

வவுனியா நெளுக்குளத்தைச் சேர்ந்தவரும் கழகத்தின் வவுனியா மாவட்டப் பொருளாளருமான தோழர் சுகந்தன் (துரைராஜா சுகந்தராஜா) அவர்கள் இன்று சுகயீனம் காரணமாக இயற்கையெய்தினார் என்பதை அனைவருக்கும் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.  அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

Read more

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர். பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே அவரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. Read more

பலபிட்டிய பகுதியில் நேற்று (17) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். பலபிட்டிய ரேவத வித்தியாலயத்தை அண்மித்து நேற்று இரவு 09 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. Read more

அனைத்து தபால்மூல வாக்குச்சீட்டுகளையும் எதிர்வரும் 21ஆம் திகதியளவில் விநியோகித்து நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்பின்னர் ஏதேனுமொரு நீதிமன்றத்தினால் அது தொடர்பில் வழக்கு தீர்ப்பு வழங்கப்படுமாயின் குறித்த உள்ளூராட்சி மன்றத்திற்கான தபால் மூல வாக்களிப்பு தாமதமாக வாய்ப்புள்ளது என அதன் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டார். Read more