Header image alt text

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் 19.04.2025 இன்று காலை 11.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெறுகிறது. Read more

உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மைத்ரி குணரத்ன தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்றைய தினம் முறைப்பாடொன்றை பதிவுசெய்ததைத் தொடர்ந்துஇ ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த மைத்ரி குணரத்ன இவ்வாறு குறிப்பிட்டார். Read more

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்கா ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு அமெரிக்க வரி முறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என 28 வறுமையான மற்றும் சிறிய நாடுகளின் பெயர் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வழங்கியுள்ளது. Read more

மன்னம்பிட்டிய பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என காவல்துறை அறிவித்துள்ளது. இதன்போது குறித்த பகுதியில் உள்ள கட்டடமொன்றின் யன்னல்கள் சேதமடைந்துள்ளன. Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவில் எதிர்வரும் திங்கட்கிழமை இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த கருத்துக்கு எதிராக சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளனர்.