முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ கோரியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கொழும்பு பேராயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். Read more
		    
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக ஒவ்வொரு நிறுவனத்தின் அதிகாரிகளின் தரவுகள் உள்ளிட்ட ஏனைய விபரங்களைத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையிலுள்ள விடயங்கள் குறித்த விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் இன்று(20) முற்பகல் கையளிக்கப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். 
கொலைக் குற்றமொன்றை மேற்கொள்வதற்காகத் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் தயார்நிலையில் இருந்த 6 பேரும், அவர்களுக்கு உதவிய மேலும் 3 பேரும் காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமக்குக் கிடைத்த தகவலொன்றுக்கமைய, நேற்று குறித்த அதிகாரிகள் கம்பஹா – வத்துமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றைச் சோதனையிட்டபோது அங்கிருந்து, இரண்டு ரீ 56 துப்பாக்கிகள், 118 தோட்டாக்கள், 3 மெகசின்கள் மற்றும் 3 வாகனங்களுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
முழுநாடும் எதிர்பார்க்கும் விசாரணைகள் மிகவும் சூட்சுமமாக நடத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பதுளை பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.