உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஏறத்தாழ 20 நீதிப்பேராணை மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரித்துள்ளது. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராகப் பல்வேறு அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் இந்த நீதிப்பேராணை மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.