அமெரிக்காவின் வரி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வொஷிங்டன் சென்றுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு அங்கு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி அறவிடப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
குறித்த வரியிலிருந்து நிவாரணம் பெறும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளதுடன் இது தொடர்பான கலந்துரையாடலுக்காக இலங்கை குழுவொன்று அமெரிக்காவிற்கு சென்றுள்ளது.
இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் கம்பஹாவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அமெரிக்கா வரியை அதிகரித்த பின்னர் அதன் பொருளாதாரம் உயரும் என ஆனந்தமடைந்திருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் சிலர் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் எனவும் அதனால் அரசாங்கம் வீழும் எனவும் மகிழ்ச்சியடைந்தனர். எவ்வாறாயினும் பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பதற்காக குழுவொன்று அமெரிக்காவுக்கு சென்றுள்ளது.
அந்த குழு தற்போது பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.