கட்டுநாயக்க ஆடியம்பலம் பகுதியில் தொழிலதிபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உந்துருளியில் பிரவேசித்த இருவரே இந்தத் தாக்குதலை நடத்த முற்பட்டனர். எனினும் அவர்களின் துப்பாக்கி இயங்காமல் போனதால் முயற்சி தோல்வியடைந்தது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.