வவுனியா கூமாங்குளம் பாண்டியன் வீதியை வதிவிடமாகக் கொண்ட திருமதி மாரிமுத்து வள்ளியம்மா அவர்கள் இன்று (23.04.2025) புதன்கிழமை இயற்கையெய்தினார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். இவர் தோழர்கள் மகேந்திரன், குமார் (யோகேந்திரன்) ஆகியோரின் அன்புத் தாயார் ஆவார்.
		    
ஜேவிபி பிழையாக நடக்கிறது என விமர்சிக்கும் இலங்கை தமிழரசுக்கட்சி, அந்த ஜேவிபியின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை வரவேற்கிறது என, அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – களுவன்கேணி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 
இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் நேற்று (22) வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 23 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் நடத்தப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது.