வவுனியா கூமாங்குளம் பாண்டியன் வீதியை வதிவிடமாகக் கொண்ட திருமதி மாரிமுத்து வள்ளியம்மா அவர்கள் இன்று (23.04.2025) புதன்கிழமை இயற்கையெய்தினார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். இவர் தோழர்கள் மகேந்திரன், குமார் (யோகேந்திரன்) ஆகியோரின் அன்புத் தாயார் ஆவார்.
அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
குறிப்பு- இறுதி நிகழ்வு நாளை (24.04.2025) வியாழக்கிழமை பிற்பகல் 11. 00 மணியளவில் இடம்பெறும்.
தொடர்புட்கு:
தோழர் மகேந்திரன் – 0770553594