புதிய சட்டங்களை வகுத்தேனும் நாட்டில் இனவாதம் தோற்கடிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புத்தளத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சிங்கள மக்கள் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர். Read more
24.04.1984ல் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் மரணித்த பொதுவுடைமைவாதி, காந்தீய செயற்பாட்டாளர், ‘விடுதலை’ இதழாசிரியர், கழகத்தின் தளபதி தோழர் பார்த்தன் (இராஜதுரை ஜெயச்சந்திரன்) அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
காரைதீவு பிரதேச சபையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று மாலை 4.00 மணி அளவில் காரைதீவில் நடைபெற்றது
நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் அடுத்த மாதம் 05 ஆம் 06 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மே 07 ஆம் திகதி பாடசாலை மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளரும், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான நெவில் சில்வா நீதிமன்றில் சரணடைந்ததைத் தொடர்ந்து, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. வெலிகமவில், 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கின் 9 ஆவது சந்தேக நபரான அவர் இன்று நீதிமன்றில் சரணடைந்தார்.