Header image alt text

25.04.1985 இல் மரணித்த தோழர் நாதன் (தேவராஜ் ஜெயசிங்கம் – மன்னார்) அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் 05ஆவது தவணையை விடுவிப்பதற்கு அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கைக்கு 344 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கிடைக்கவுள்ளது. Read more

சமூக செயற்பாட்டாளரான டேன் பிரியசாத் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சமூக செயற்பாட்டாளரான டேன் பிரியசாத் கடந்த 22 ஆம் திகதி இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். Read more

ஜம்மு – காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடி கண்டனம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இரு நாட்டுத் தலைவர்களும் சுமார் பதினைந்து நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினர். Read more

காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக, உயர் நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்குழுவில் நீதியரசர் நீல் இத்தவெல மற்றும் காவல்துறை ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

தெவிநுவர இரட்டை கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த 2 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 33 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச்செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more

கஜ்ஜா என அழைக்கப்படும் அனுர விதான கமகே மற்றும் அவரது 2 பிள்ளைகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் துப்பாக்கிதாரி பயணித்ததாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். Read more

பரஸ்பர தீர்வை வரி தொடர்பில் ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதிகளுக்கான அலுவலகத்துடன் வொஷிங்டன் டிசியில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் அரசாங்கம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. இலங்கையின் தூதுக்குழுவினர் வொஷிங்டன் டிசியிலுள்ள(Washington, D.C) ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதிகளுக்கான அலுவலகத்தில் கடந்த 22ஆம் திகதி அதன் தூதுவர் Jamieson Greer-ஐ சந்தித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more