சமூக செயற்பாட்டாளரான டேன் பிரியசாத் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சமூக செயற்பாட்டாளரான டேன் பிரியசாத் கடந்த 22 ஆம் திகதி இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராகக் கருதப்படும் துலான் மதுசங்க எனப்படும் துலா என்பவரை காவல்துறையினர் கைது செய்து இன்று கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
மிரிஹான விசேட விசாரணை பிரிவின் ஊடாக இந்த சந்தேக நபர் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷண கெக்குணவல முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.
இதன் போதே சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.