ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது. பரீட்சைகள் திணைக்களத்தின் Doenets.LK உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளைப் பார்வையிட முடியும். இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 3,33,185 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் தேர்தல் அறிக்கை வெளியீடும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
சலுகை தொடர்பான நிபந்தனைகள் குறித்த முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளது. இந்தக் குழு எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க – ஹீனடியன – இஹல மெண்டிய பகுதியில் இன்று உந்துருளியில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 29 வயதுடைய நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உந்துருளியில் வந்த இருவரினால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.