Header image alt text

28.04.2024 இல் யாழ்ப்பாணம் மானிப்பாயில் மரணித்த தோழர் பவுண் (இராஜநாயகம் சிவகுமாரன்) அவர்களின் முதலாமாண்டு நினைவு நாள்…

தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் செயற்பாடுகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக புளொட் தலைவரும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Read more

கேள்வி :
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உங்கள் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி போட்டியிடாத ஏனைய உள்ளூராட்சி மன்றங்களில் உள்ள உங்கள் ஆதரவாளர்களின் வாக்குகளை யாருக்கு பெற்றுக் கொடுப்பீர்கள்? இதற்கென ஏதேனும் கட்சிகளுடன் உடன்பாடுகளை மேற்கொண்டுள்ளீர்களா?
பதில்:
உத்தியோகபூர்வமாக அவ்வாறான உடன்பாடுகள் எதுவும் ஏனைய கட்சிகளுடன் இதுவரையிலும் இல்லை.

Read more

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாம்களை நிறுவுதல் மற்றும் நடத்திச் செல்லல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. Read more

பாணந்துறை – ஹிரண பகுதியில் இன்று(29) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 35 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டில் 20 வயதான இளைஞரொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஹிரண பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். Read more