கட்டுநாயக்க 18 ஆம் கட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கட்டுநாயக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 50 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Posted by plotenewseditor on 8 April 2025
Posted in செய்திகள்
கட்டுநாயக்க 18 ஆம் கட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கட்டுநாயக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 50 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Posted by plotenewseditor on 8 April 2025
Posted in செய்திகள்
ஊவா மாகாண சபையின் 6 கணக்குகளின் நிலையான வைப்புகளை முதிர்வு காலம் நிறைவடைவதற்கு முன்னர் நீக்கப்பட்டமை தொடர்பான வழக்கிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். Read more
Posted by plotenewseditor on 7 April 2025
Posted in செய்திகள்
திருகோணமலை மாவட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் போட்டியிடுகின்ற உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்களினது அறிமுக நிகழ்வு 06.04.2025 அன்று மாலை 03.00 மணியளவில் உப்புவெளியில் அமைந்துள்ள சுவர்க்கா விடுதியில் நடைபெற்றது.Posted by plotenewseditor on 7 April 2025
Posted in செய்திகள்
இஸ்ரேலுக்கு எதிராகச் சுவரொட்டி ஒட்டிய குற்றச்சாட்டில் கைதாகித் தடுப்புக் காவலில் இருந்த ருஷ்தி என்ற இளைஞர் பிணையில் விடுவிக்கப்பட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், இன்று அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது அவரை பிணையில் விடுவிக்கவும், மாதாந்தம் அவர் காவல் நிலையம் ஒன்றில் கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 7 April 2025
Posted in செய்திகள்
கொழும்பு மாநாகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை ஆட்சேபித்து அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதியளித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 7 April 2025
Posted in செய்திகள்
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு நாளை(08) வரை விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று(07) காலை பதுளை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தார். பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குறிப்பிடக்கூடிய குற்றங்களை இழைத்துள்ளதாக தெரிவித்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more
Posted by plotenewseditor on 6 April 2025
Posted in செய்திகள்
திருகோணமலைக்கு விஜயம் செய்த ஐ.நா. அதிகாரியின் வதிவிடப் பிரதிநிதி Marc-André Franche மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் திருகோணமலை மாநகரசபை பெண் வேட்பாளர் திருமதி இ.வசந்தினி ஆகியோரிடையே முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று 05/04/2025 அன்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.Posted by plotenewseditor on 6 April 2025
Posted in செய்திகள்
தமிழ்நாடு இராமேஸ்வரத்தில் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலமான புதிய பாம்பன் பாலம் இன்று பிற்பகல் இந்தியப் பிரதமர் நரேந்திரத மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்திய மதிப்பில் சுமார் 700 கோடி ரூபாய் செலவில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கடல் மேல் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தின் 72.5 மீட்டர் நீளமுள்ள பகுதியை தூக்கி, அதன் கீழ் கப்பல்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி 17 மீற்றர் உயரத்திற்கு தூக்கப்படும் வகையில் கட்டப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 6 April 2025
Posted in செய்திகள்
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் நாடு திரும்பினார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று முற்பகல் அனுராதபுரத்திற்கு சென்றார். Read more
Posted by plotenewseditor on 6 April 2025
Posted in செய்திகள்
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அனுராதபுரத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது அனுராதபுரம் தொடருந்து நிலையத்தின் சமிக்ஞை அமைப்பை அவர் திறந்து வைத்தார். மேலும் நவீனமயமாக்கப்பட்ட மஹவ – ஓமந்தை தொடருந்து பாதையையும் இந்தியப் பிரதமர் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். குறித்த நிகழ்வில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.