இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் மனிதாபிமான அணுகுமுறை பேணப்பட வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது பாக்கு நீரிணையின் இரு பக்கமும் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பிரச்சினை என்பதால் இந்த விடயத்தில் மனிதாபிமானதும் ஆக்கப்பூர்வமானதுமான அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும். Read more
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அநுராதபுரத்திற்குச் செல்லவுள்ளார். இதன்போது, இந்தியப் பிரதமர் அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதி விகாரையில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் இந்தியப் பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு அநுராதபுர நகரைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்றுமாலை கொழும்பில் நடைபெற்றது. இச் சந்திப்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் சீ.வீ.கே. சிவஞானம், சி.சிறீதரன், எம்.ஏ. சுமந்திரன், இரா.சாணக்கியன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
”செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
மியன்மாரில் நில அதிர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் பிரிகேடியர் புண்யா கருணாதிலக்க தலைமையில் 26 முப்படை வீரர்களைக் கொண்ட மருத்துவ மற்றும் விசேட நிவாரண சேவைக் குழு இன்று விசேட விமானத்தில் மியன்மாருக்குப் புறப்பட்டுச் சென்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய மிகக் குறுகிய காலத்தில் முப்படைத் தளபதிகளின் தலைமையில் இந்த விசேட அனர்த்த நிவாரண சேவை குழு தயார்ப்படுத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.
இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ஐ.என்.எஸ் சயாத்ரி, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (04) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 143 மீற்றர் நீளமுடைய இந்த கப்பலில் 320 நிர்வாக குழுவினர் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விஜயமானது இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்துவதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பமாகியுள்ளது. இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்தியாவின் உயர்மட்டக் குழுவினரை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வரவேற்றார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை நடைபெற்றது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்ப்பிப்பதற்காக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான, எஸ்.ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன், துரைராசா ரவிகரன், கவீந்திரன் கோடீஸ்வரன், சண்முகம் குகதாசன் மற்றும் பா.சத்தியலிங்கம் உள்ளிட்டோரிடம் நேற்று (04) இந்த கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டை வந்தடைந்தார். இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு நாளை காலை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. இந்தியப் பிரதமர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனும், ஏனைய பல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதியில் எந்தவித மாற்றமும் இல்லை எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் கருத்துரைத்த அவர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.