மியன்மாரில் நிவாரண பணிகளில் ஈடுபடுவதற்காக முப்படைகளின் மூன்று குழுக்கள் நாளை விசேட விமானத்தின் மூலம் மியன்மாருக்குச் செல்லவுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மியன்மாரில் ஏற்பட்ட நில அதிர்வின் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக வைத்தியர்கள் குழுவொன்றும் செல்ல தயாராகவுள்ளதாகத் தெரிவித்துப் பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. Read more
நீதிமன்ற உத்தரவுகளை மீறி நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷான் சந்திரஜித் உள்ளிட்ட இருவர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட போது பட்டதாரிகள் குழுவொன்று கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் 25 பேர் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
காங்கேசன்துறைக்கும் – தமிழகத்தின் நாகபட்டினத்துக்கும் இடையேயான சிவகங்கை கப்பல் சேவை, சீராக இடம்பெறுவதாக அந்த கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். குறித்த கப்பல் சேவையில் தடங்கல் இருப்பதாகத் தகவல் வெளியான நிலையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கை மீதான அமெரிக்காவின் வரி விதிப்பினால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்படையும் சாத்தியம் நிலவுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கை பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார். அமெரிக்காவின் நடவடிக்கையானது இலங்கையில் உள்ள சில தொழிற்சாலைகளை மூடுவதற்கு வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஹிக்கடுவை ரூனெயளர் குமாரகந்த பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் . 51 வயதுடைய ஆணொருவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விளக்கமறியலில் உள்ள காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று அவரை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வழக்கு நடவடிக்கைகளின் போது முறைகேடுகள் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட மாரவில நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவான் அசேல சில்வாவை உடனமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்ய நீதிச்சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. மாரவில நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள் சிலரால் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்குப் பல முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
குடிவரவு இகுடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்கின்ற மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு விடயஞ்சார் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வவுனியா பிராந்திய அலுவலகத்திற்குப் பயணம் செய்வதற்கு அதிக நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது.
பிரித்தானியாவினால் 4 இலங்கையர்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டமை தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக மூன்று பேர் கொண்ட அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த தடை தொடர்பான விடயங்களை ஆராய்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றி அமைச்சரவைக்கு விதந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்காகக் குறித்த அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் சியோல் நகரில் அமைதியின்மை ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவுவதன் காரணமாக எதிர்வரும் வெள்ளி (4) மற்றும் சனிக்கிழமைகளில் (5) அங்குள்ள தூதரகம் திறக்கப்பட மாட்டாது என தென் கொரியாவிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. இதன்படி, அவசர தேவைகள் தவிர்ந்து ஏனைய சந்தர்ப்பங்களில் சியோல் நகருக்குள் பிரவேசிப்பதனை தவிர்க்குமாறு அந்த நாட்டிலுள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.