கச்சத்தீவை மீட்கக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்வைத்த தனிநபர் பிரேரணை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டப் பேரவையில், கச்சத்தீவு மீட்பு தொடர்பான தனிநபர் பிரேரணையை முன்மொழிந்து மு.க ஸ்டாலின் உரையாற்றியிருந்தார். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் நடவடிக்கை, முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக அமைந்துள்ளதாகத் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read more
வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுடன் தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகள் மீண்டும் நாளை வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
வட மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான எஸ்.எம் ரஞ்சித் மற்றும் அவரது மைத்துனியான ஷாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 16 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர்களுக்கு எதிராக 06 குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவர் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 மாணவர்களுக்கு உடன் அமுலாகும் வகையில் வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிராஜன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோரிடமிருந்தும், மாணவரிடமிருந்தும் பெறப்பட்ட முதற்கட்டத் தகவலின் அடிப்படையில் பல்கலைக்கழக சட்ட நிறைவேற்று அதிகாரி, ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
01.04.1993 அன்று வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் கரன் (வீரபுத்திரன் இன்பரவி – கடுக்காமுனை), காளிதாஸ் (அங்குசாமி சந்திரமோகன் – ஏறாவூர்), மதன் (கிறிஸ்டியான் ஜெபஸ்டியான் – கல்லடி) ஆகியோரின் 32ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..
மோட்டார் வாகனங்கள் தொடர்பான அனைத்து சேவைகளுக்காகவும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான அறிக்கை ஒன்றை அந்த திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.
இலஞ்சம் பெற்றுக்கொள்ள உதவிய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை எதிர்வரும் 8ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி இன்று உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கடந்த 27 ஆம் திகதி கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க முன்னிலையான போது கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட அவர் அன்றைய தினமே நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இத்தாலியின் ட்ரெண்டினோ நகரத்தில் உள்ள கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு வீடு மற்றும் பணம் வழங்க இத்தாலி அரசு தீர்மானித்துள்ளது. இந்த நகரத்தின் 33 கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு சொந்தமாக வீடு மற்றும் இந்திய மதிப்பில் 92 இலட்சம் ரூபாய் பணத்தை வழங்க முடிவு செய்துள்ளது. வெளிநாட்டவரும் இந்த வாய்ப்பை பெறலாம் என இத்தாலி அரசு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளையும் நாளை வரை இடைநிறுத்தி இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.