நோட்டிகா அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. தாய்லாந்திலிருந்து 614 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 397 பணியாளர்களுடன் குறித்த கப்பல் வருகைதந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் நேற்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த பின்னர், இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் நாளை பிற்பகல் இந்தியாவிற்கு புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ கண்காணிப்பு செயற்றிட்டக்குழு இலங்கைக்கு இன்று(28) வருகை தரவுள்ளது. இலங்கைக்கு வழங்கப்படும் GSP+ வரிச் சலுகைகள் தொடர்பான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதில் இலங்கை எட்டியுள்ள முன்னேற்றங்களை மதிப்பீடு செய்வதே குறித்த குழுவின் நோக்கமாகும். இந்தக் குழுவினர் எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளனர்.
27.04.1991இல் வவுனியா தாண்டிக்குளத்தில் மரணித்த தோழர்கள் சேகர் (முருகேசு வடிவேல் – திருவையாறு), ரவி (கிளைமண்ட் எதிர்மன்னசிங்கம் – குருநகர்) ஆகியோரின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
பாராளுமன்றத் தேர்தலில் ஜே.பி.பி.யைத் தெரிவுசெய்தமைக்காக பலர் தற்போது வருத்தப்படுகின்றனர். எனவே, அவ்வாறான தவறை மீண்டும் செய்யவேண்டாம் என்று பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
புனித தந்ததாது கண்காட்சியை முன்னிட்டு, ஏற்படக்கூடிய நெரிசலைத் தவிர்ப்பதற்குக் கண்டி நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மூடப்பட்டிருந்த 24 பாடசாலைகளும் நாளை திறக்கப்படவுள்ளன. அத்துடன், பாதுகாப்பு பிரிவினரின் தங்குமிடமாகப் பயன்படுத்தப்பட்ட 37 பாடசாலைகள் நாளை மறுதினம் மீளத் திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
பாதுகாப்பு காரணங்களுக்காகப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து காணிகளையும் மீள ஒப்படைப்பது குறித்துக் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது இதனைக் குறிப்பிட்ட அவர், விடுவிக்கக்கூடிய அனைத்து காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாடு கொலைகாரர்கள், கொள்ளையர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் என அனைவராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வத்தளை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது வீதிகளிலும்இ தொழில் புரியும் இடங்களிலும் கொலைகள் இடம்பெறுகின்றன.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் தேர்தல் அறிக்கை வெளியீடும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.