கஜ்ஜா என அழைக்கப்படும் அனுர விதான கமகே மற்றும் அவரது 2 பிள்ளைகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் துப்பாக்கிதாரி பயணித்ததாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். Read more
பரஸ்பர தீர்வை வரி தொடர்பில் ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதிகளுக்கான அலுவலகத்துடன் வொஷிங்டன் டிசியில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் அரசாங்கம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. இலங்கையின் தூதுக்குழுவினர் வொஷிங்டன் டிசியிலுள்ள(Washington, D.C) ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதிகளுக்கான அலுவலகத்தில் கடந்த 22ஆம் திகதி அதன் தூதுவர் Jamieson Greer-ஐ சந்தித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய சட்டங்களை வகுத்தேனும் நாட்டில் இனவாதம் தோற்கடிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புத்தளத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சிங்கள மக்கள் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர்.
24.04.1984ல் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் மரணித்த பொதுவுடைமைவாதி, காந்தீய செயற்பாட்டாளர், ‘விடுதலை’ இதழாசிரியர், கழகத்தின் தளபதி தோழர் பார்த்தன் (இராஜதுரை ஜெயச்சந்திரன்) அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
காரைதீவு பிரதேச சபையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று மாலை 4.00 மணி அளவில் காரைதீவில் நடைபெற்றது
நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் அடுத்த மாதம் 05 ஆம் 06 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மே 07 ஆம் திகதி பாடசாலை மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளரும், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான நெவில் சில்வா நீதிமன்றில் சரணடைந்ததைத் தொடர்ந்து, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. வெலிகமவில், 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கின் 9 ஆவது சந்தேக நபரான அவர் இன்று நீதிமன்றில் சரணடைந்தார்.
வவுனியா கூமாங்குளம் பாண்டியன் வீதியை வதிவிடமாகக் கொண்ட திருமதி மாரிமுத்து வள்ளியம்மா அவர்கள் இன்று (23.04.2025) புதன்கிழமை இயற்கையெய்தினார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். இவர் தோழர்கள் மகேந்திரன், குமார் (யோகேந்திரன்) ஆகியோரின் அன்புத் தாயார் ஆவார்.
ஜேவிபி பிழையாக நடக்கிறது என விமர்சிக்கும் இலங்கை தமிழரசுக்கட்சி, அந்த ஜேவிபியின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை வரவேற்கிறது என, அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – களுவன்கேணி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் நேற்று (22) வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 23 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் நடத்தப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது.