Header image alt text

ஜே.வி.பியின் தேசியப் பட்டியலில் இருந்த இப்ராஹிம் என்பவரே ஏப்ரல் 21 தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்குப் பணம் மற்றும் அதிகாரம் என்பவற்றை வழங்கியுள்ளதாக அமெரிக்காவின் எஃப்.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். Read more

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ கோரியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கொழும்பு பேராயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக ஒவ்வொரு நிறுவனத்தின் அதிகாரிகளின் தரவுகள் உள்ளிட்ட ஏனைய விபரங்களைத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. Read more

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையிலுள்ள விடயங்கள் குறித்த விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் இன்று(20) முற்பகல் கையளிக்கப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். Read more

கொலைக் குற்றமொன்றை மேற்கொள்வதற்காகத் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் தயார்நிலையில் இருந்த 6 பேரும், அவர்களுக்கு உதவிய மேலும் 3 பேரும் காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமக்குக் கிடைத்த தகவலொன்றுக்கமைய, நேற்று குறித்த அதிகாரிகள் கம்பஹா – வத்துமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றைச் சோதனையிட்டபோது அங்கிருந்து, இரண்டு ரீ 56 துப்பாக்கிகள், 118 தோட்டாக்கள், 3 மெகசின்கள் மற்றும் 3 வாகனங்களுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more

முழுநாடும் எதிர்பார்க்கும் விசாரணைகள் மிகவும் சூட்சுமமாக நடத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பதுளை பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். Read more

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் 19.04.2025 இன்று காலை 11.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெறுகிறது. Read more

உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மைத்ரி குணரத்ன தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்றைய தினம் முறைப்பாடொன்றை பதிவுசெய்ததைத் தொடர்ந்துஇ ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த மைத்ரி குணரத்ன இவ்வாறு குறிப்பிட்டார். Read more

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்கா ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு அமெரிக்க வரி முறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என 28 வறுமையான மற்றும் சிறிய நாடுகளின் பெயர் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வழங்கியுள்ளது. Read more

மன்னம்பிட்டிய பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என காவல்துறை அறிவித்துள்ளது. இதன்போது குறித்த பகுதியில் உள்ள கட்டடமொன்றின் யன்னல்கள் சேதமடைந்துள்ளன. Read more