உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவில் எதிர்வரும் திங்கட்கிழமை இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த கருத்துக்கு எதிராக சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளனர்.
18.04.2016ல் மரணித்த மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் தோழர் சிங்கம் (பெனடிக்ட் தனபாலசிங்கம்) அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் இன்று…. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வதிவிடமாகவும் கொண்ட இவர் தனது இளம் பராயத்திலேயே சமூக சேவைகளில் அதிக நாட்டம் கொண்டிருந்தார்.
வவுனியா நெளுக்குளத்தைச் சேர்ந்தவரும் கழகத்தின் வவுனியா மாவட்டப் பொருளாளருமான தோழர் சுகந்தன் (துரைராஜா சுகந்தராஜா) அவர்கள் இன்று சுகயீனம் காரணமாக இயற்கையெய்தினார் என்பதை அனைவருக்கும் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர். பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே அவரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பலபிட்டிய பகுதியில் நேற்று (17) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். பலபிட்டிய ரேவத வித்தியாலயத்தை அண்மித்து நேற்று இரவு 09 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
அனைத்து தபால்மூல வாக்குச்சீட்டுகளையும் எதிர்வரும் 21ஆம் திகதியளவில் விநியோகித்து நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்பின்னர் ஏதேனுமொரு நீதிமன்றத்தினால் அது தொடர்பில் வழக்கு தீர்ப்பு வழங்கப்படுமாயின் குறித்த உள்ளூராட்சி மன்றத்திற்கான தபால் மூல வாக்களிப்பு தாமதமாக வாய்ப்புள்ளது என அதன் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டார்.
எமது வவுனியா மாநகரின் உரிமைக்கான அடையாளம் மாற்றப்பட்டு இருக்கிறது. வர்த்தமானியில் சிங்கள மொழியில் වව්
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தைத் தேசிய மக்கள் சக்தி முழுமையாகக் கைப்பற்றுமாக இருந்தால் அந்த மாவட்டத்தை எவராலும் காப்பாற்ற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – குருநகர் கடற்கரை பகுதியில் இருந்து T56 ரக துப்பாக்கி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு நேற்று கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே துப்பாக்கி மீட்கப்பட்டது. அத்துடன் 5 தோட்டாக்களும் 10 வெற்று மெகஸின்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் துருப்பிடித்து பாவிக்க முடியாத நிலையில் உள்ளதாக பொலிஸார் கூறினர்.