Header image alt text

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 20ஆம் திகதியின் பின்னர் வௌியிட தீர்மானித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்தது. ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சை பெறுபேறுகளை வௌியிட ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. Read more

நாளை(13) முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை பகல் வேளையில் வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கலங்களை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு இலங்கை மின்சார சபை பாவணையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மின்சார கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. Read more

சிவனேசதுரை சந்திரகாந்தனை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர். மட்டக்களப்பில் கடந்த 8 ஆம் திகதி இரவு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டார். நபரொருவர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டார். Read more

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நாளையும் (13) – நாளை மறுதினமும் (14) சிறைக்கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. கைதி ஒருவருக்கு போதுமான திண்பண்டங்கள், உணவு, சுகாதார பொருட்கள் அடங்கிய பொதியை மாத்திரமே உறவினர்கள் கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டது. Read more

11.04.1984 ல் ஆரியகுளம் சந்தியில் மரணித்த மாணவர் பேரவையின் தோழர்கள் கேதீஸ்வரன் (தம்பலகமம்), கிருபானந்தன் (கொக்குவில்) ஆகியோரின் 41ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

மாகாண சபைத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார். யாழ்ப்பாணத்திற்கு இன்று(11) விஜயம் மேற்கொண்ட அவர் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்த போதே இதனை தெரிவித்தார். 06 மாத காலப்பகுதியில் 03 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில் நான்காவது தேர்தலாக மாகாண சபை தேர்தலை நடத்த தமது அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார். Read more

11.04.2014 ல் யாழ்ப்பாணத்தில் மரணித்த தோழர் நந்தன் (பசுபதி பரசோதிலிங்கம் – மல்லாவி) அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

நாட்டில் நடத்திச் செல்லப்படும் வௌிநாட்டு பல்கலைக்கழக கிளைகள் மற்றும் வளாகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய வேலைத்திட்டத்தை தயாரிக்க கல்வி, உயர் கல்வி, தொழிற்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த நிறுவனங்களின் பாடத்திட்டங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற பல்வேறு முறைப்பாடுகளைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் மதுர செனெவிரத்ன தெரிவித்தார். Read more

உள்ளூராட்சி தேர்தலுக்காக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சமர்ப்பித்து நிராகரிக்கப்பட்ட 11 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 10 உள்ளூராட்சி மன்றங்களுக்கும், மன்னாரில் மாந்தைக்குமாக 11 உள்ளூராட்சி மன்றங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான மெட்டா நிறுவனம் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு பேஸ்புக் மெசேஜர்  இன்ஸ்டாகிராம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பெற்றோர்கள் தங்களின் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கணக்குகளை நேரடியாக மேற்பார்வையிடக் கூடிய வசதிகளை அளித்துள்ளது. Read more