Header image alt text

யுத்தம் நிலவிய காலப்பகுதியில் LTTE அமைப்பினர் வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ் மாஅதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. பத்தரமுல்லை இராணுவ தலைமையகத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது. Read more

மட்டக்களப்பு – வவுணதீவில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். வவுணதீவு – நாவற்காடு பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விவசாயக் காணியை காவல் காப்பதற்காக சென்றிருந்த போது இந்த விபத்து பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பூரணமடைந்தார். கொழும்பில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் நேற்றிரவு(01) பூரணமடைந்தார். சுவாமிகளின் திருவுடல் இன்று(02) யாழ்.ஆதீனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு பூரணத்துவ சாந்தி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. Read more

பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆட்சேர்ப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக மட்டத்தில் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பிரதியமைச்சர், டொக்டர் மதுர செனெவிரத்ன தெரிவித்தார். Read more