கொட்டாஞ்சேனை பகுதியில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி, மட்டக்களப்பு – காந்தி பூங்கா வளாகத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. என் மௌனம் என் குற்றமல்ல, உன் செயல்தான் குற்றம் – மௌனத்தைக் கலைப்போம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் சிவில் சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.