ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது மத்தியகுழு கூட்டம் (11.05.2025) கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதானமாக நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் தேர்தல் முடிவுகள், மேலதிக பட்டியல் ஆசனங்களுக்கான ஒதுக்கீடு மற்றும் தமிழ் மக்கள் வாழும் சபைகளில் ஏனைய தரப்புகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து நடைபெற்று வரும் பேச்சுக்கள் ஆகிய விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
12.05.1998இல் வவுனியா கோவில்குளத்தில் மரணித்த தோழர்கள் தாஸ் (செல்லத்துரை சாந்தகுமார்), விந்தன் (தம்பிராஜா துரைராஜா), சாந்தன் (சின்னத்தம்பி சிவநேசன்), ஜூலி (செல்லத்தம்பி பத்மசீலன்), லோரன்ஸ் ஆகியோரின் 27ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….
இறம்பொடை – கெரண்டி எல்ல பகுதியில் 22 பேருக்கு மரணத்தை ஏற்படுத்திய விபத்துடன் தொடர்புடைய பேருந்தில் நடத்தப்பட்ட ஆரம்ப பரிசோதனையில் பேருந்தில் இயந்திரக் குறைபாடுகள் எதுவும் இல்லை என, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார். அத்துடன், விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி வடக்கு, கிழக்கில் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே 12 ஆம் திகதி முதல் மே 18 ஆம் திகதி வரை கஞ்சிவாரம் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ். வலிகாமம் வடக்கு ரூனெயளர் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தியும், பொது மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த விகாரை அமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும், இவ்விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், காணியின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 628 பணியாளர்களுடன் குறித்த கப்பல் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் நேற்று (11) இரவு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த பின்னர், இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.