ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது மத்தியகுழு கூட்டம் (11.05.2025) கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதானமாக நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் தேர்தல் முடிவுகள், மேலதிக பட்டியல் ஆசனங்களுக்கான ஒதுக்கீடு மற்றும் தமிழ் மக்கள் வாழும் சபைகளில் ஏனைய தரப்புகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து நடைபெற்று வரும் பேச்சுக்கள் ஆகிய விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் உள்ளுராட்சி சபைகளை அமைப்பது சம்பந்தமான தத்தமது கருத்துக்களை கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் முன்வைத்திருந்தனர்.
இதன்போது பிரதான தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் இணைந்து சபைகளின் அதிகாரத்தைப் பகிர்ந்து பெறுவது தொடர்பாக சாத்தியமான வகையில் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டுமென உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட மட்டத்தில் தீர்க்க முடியாத விடயங்களை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிறைவேற்றுக் குழுவில் முன்வைத்து தீர்வைக் காண்பதெனவும் ஆலோசிக்கப்பட்டது.