Header image alt text

வவுனியா மாநகரசபை மேயர் பதவியை நான் கேட்கவில்லை. ஜனநாயக முறைப்படி எனக்கு வழங்கினால் முன்மாதிரியாக நடத்திக் காட்டுவேன் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வவுனியா மாநகரசபை உறுப்பினராக தெரிவான சு.காண்டீபன் தெரிவித்துள்ளார். வவுனியா மாநகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர் சு.காண்டீபன் மாநகர மேயர் பதவியை கோருவதாக வெளியான செய்தி தொடர்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read more

மட்டக்களப்பு காந்தி பூங்காவிலும் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது. இதன்போது, முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலிசுமந்த கதை சொல்வோம் என்ற வாசகம் அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது. Read more

புங்குடுதீவு மாணவி வித்யா கொல்லப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்றும் பல பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது. யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியிலும் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது. அதேநேரம், யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. Read more

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக, வவுனியா கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று வவுனியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. Read more