புங்குடுதீவு மாணவி வித்யா கொல்லப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பெயர் விபரங்களை, காவல்துறையினர் கோரிய நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவியிருந்தது.