வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட கட்சிக்கு ஏனைய தரப்புகள் ஆதரவளிக்கும் வகையிலான, உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணிக்கும், இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெற்றது. Read more
கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் கீழ் இலங்கை அரசாங்கம் மற்றும் இந்தியாவின் எக்ஸிம் வங்கி(EXIM Bank) இடையே இருதரப்பு திருத்தப்பட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. கடன் வசதி மற்றும் கடன் பெறுவதற்கான வசதி தொடர்பிலேயே இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் 7 பேர் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக தங்களது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர். அதன்படி நற்சான்று பத்திரங்களை கையளித்த தூதுவர்களின் பெயர் விபரம்,
இலங்கை மற்றும் செக் குடியரசுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் நடைபெற்றது. வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் செக் குடியரசின் வெளிவிவகார பிரதி அமைச்சர் ஜூரி கோசாக் ஆகியோருக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இருக்கின்ற அனைத்து குழுக்களுடனும் எதிர்காலத்தில் கலந்துரையாடி உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கை வௌியிட்டுள்ளது.