இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் 7 பேர் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக தங்களது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர். அதன்படி நற்சான்று பத்திரங்களை கையளித்த தூதுவர்களின் பெயர் விபரம்,

மாரியானோ அகுஸ்டின் கவ்சினோ – புதுடெல்லியிலுள்ள ஆர்ஜென்டீனா குடியரசின் தூதரகம்

ஸ்டெல்லா கொமோ – புதுடெல்லியில் உள்ள சிம்பாப்வே தூதரகம்

ரூவென் ஹவீயர் அசார் – புதுடெல்லி இஸ்ரேல் தூதரகம்

நினா பி. கயிங்லெட் – டகாவிலுள்ள பிலிபைன்ஸ் துதரகம்

லுக்மொன் போபோகலொன்சோடா – புதுடெல்லியிலிருக்கும் டஜிகிஸ்தான் குடியரசு தூதரகம்

ரத் மெனி – புதுடெல்லியில் உள்ள கம்போடியா இராச்சியத்தின் தூதரகம்

ரஸ்மஸ் கிறிஸ்டென்சன் – புதுடெல்லியிலுள்ள டென்மார்க் இராச்சியத்தின் தூதரகம்