Header image alt text

யாழ். எழுதுமட்டுவாழ் தெற்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் கழகத்தின் முன்னாள் தென்மராட்சி பிரதேச அரசியல் பிரிவு பொறுப்பாளராவார்.

யாழ்ப்பாணம் – செம்மணி, சிந்துப்பாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப் பணிகளின் இரண்டாம் நாளான நேற்றைய தினம், மூன்றடி ஆழத்தில் முழுமையான என்புத் தொகுதியொன்றும், மண்டையோடும், கையொன்றும் மீட்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அகழ்வு செய்யப்படும் பகுதியின் வெவ்வேறு இடங்களிலிருந்து மீட்கப்பட்டதால், அந்த இடம் மனிதப் புதைகுழியாக இருக்கலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. Read more

கல்கிஸ்ஸை கரையோர வீதி பகுதியில் காலி வீதிக்கு அருகில் இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக உந்துருளியை செலுத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பன்னிபிட்டிய – மாகும்புர பிரதேசத்தில் கைது செய்துள்ளதாக கல்கிஸ்ஸை பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். Read more

கொழும்பு – கொட்டாஞ்சேனை சுமித்ராராம மாவத்தையில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு 13ஐச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இன்று புதுக்கடை 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.