கல்கிஸ்ஸை கரையோர வீதி பகுதியில் காலி வீதிக்கு அருகில் இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக உந்துருளியை செலுத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பன்னிபிட்டிய – மாகும்புர பிரதேசத்தில் கைது செய்துள்ளதாக கல்கிஸ்ஸை பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் கல்கிஸ்ஸை நகர சபையில் பணியாற்றிய துப்புரவுப் பணியாளர் ஒருவரே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய தெஹிவளை, ஓபன் பகுதியில் வசிக்கும் ப்ரவீன் நிஸ்ஸங்க எனும் 19 வயதுடைய இளைஞர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர். துப்பாக்கிதாரியுடன் பயணித்த உந்துருளியின் பாகங்கள் சந்தேகநபரின் வீட்டின் பின்பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.