Header image alt text

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நாட்களில் அங்கிருந்து காயப்பட்ட மக்களை வவுனியா வைத்தியசாலையில் கொண்டு வந்து குவித்த வண்ணமும் அங்கிருந்து முகாம்களுக்கு அனுப்பிய வண்ணமும் இருந்தார்கள் மருத்துவ உதவி நிறுவனங்களும், தொண்டர்களும் இராணுவத்தினரும். இக்கால கட்டத்தில் புளொட் தோழர்கள் வைத்தியசாலையிலும் முகாங்களிலும் இருந்த மக்களுக்கு தம்மால் இயன்ற உணவு வசதிகளையும் வேறு அத்தியாவசிய தேவை வசதிகளையும் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

Read more

இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் இன்றாகும்(மே 18).

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 10 ஆண் சந்தேக நபர்ளையும், இரு பெண் சந்தேக நபர்களையும் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. Read more

கொழும்பு ப்ளூமெண்டல் – சிறிசந்த செவன மாடி வீட்டுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிலர் காவல்துறையினருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரை பகுதியில், முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. Read more

இனிவரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சூரியனின் செய்திப் பணிப்பாளர் பரமேஷ்வரன் விக்னேஷ்வரனின் நெறியாள்கையில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். Read more

யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 16 ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும். 2009 இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளில் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இறுதியுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானதுடன் பல பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. Read more