இனிவரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சூரியனின் செய்திப் பணிப்பாளர் பரமேஷ்வரன் விக்னேஷ்வரனின் நெறியாள்கையில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன், தமது கட்சியில் அடுத்த கட்ட தலைவர்களைத் தாம் உருவாக்கியுள்ளதாகவும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.