Header image alt text

20.05.1989இல் முள்ளிக்குளத்தில் மரணித்த கழகத்தின் தென்னிலங்கைப் பொறுப்பாளர் கந்தசாமி (சங்கிலி) க.கதிர்காமராஜன்), வரதப்பா(முல்லை), வசந்த்(யாழ்), மாதவன்(தலைவர்-ரெலா), சேவற்கொடி (க.ரூபகாந்தன் – தள இராணுவப் பொறுப்பாளர்), சாமி(தம்பியப்பா பாஸ்கரன் -யாழ்), சைமன்(யாழ்), பிரபு(முல்லை), மரியான்(மன்னார்), பாபு(ஜெஸ்மின்- திருமலை), ரவீந்திரன்(மன்னார்), நந்தீஸ்(மன்னார்), சிறி(முசுறி -மன்னார்), சுதன்(வவுனியா), சுகுணன்(வவுனியா), யூலி(மன்னார்), பி.எல்.ஓ(வவுனியா), பேணாட்(வவுனியா), சீலன்(மன்னார்), சசி(வவுனியா), அத்தான்(யாழ்), தேவன்(கிளிநொச்சி),
கமலன்(மன்னார்), மார்க்ஸ்(யாழ்), லிங்கம்(வவுனியா), வே.சுரேஸ்(யாழ்),

Read more

நியூசிலாந்தின் துணைப் பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.  எதிர்வரும் மே 24 ஆம் திகதி அவர் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது, ​​ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை அவர் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டாரவாரியாக வெற்றி பெற்ற வேட்பாளர்களில், 40 வீதமானோர் தொடர்பான தகவல்கள் இதுவரையில் தங்களுக்குக் கிடைக்கவில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read more

கொட்டாஞ்சேனை பகுதியில் சிறுமி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தின் குற்றவாளி யார் என தமக்குத் தெரியும் என்று பாடசாலை நிர்வாகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

Read more

போதைப்பொருள் உள்ளிட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 10 குழுக்களுடன் அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். குற்றச்செயல்களை தடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் இன்று(20) பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். Read more

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 3ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று(20) காலை கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் 3 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் வீதி அதிகார சபையில் தற்காலிகமாக கடமையாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்க கோரி ஐக்கிய பொது சேவையாளர் சங்கம்  செவ்வாய்க்கிழமை (20) அன்று பொலிஸ் நிலைய வீதி சுற்றுவட்டத்தில் இருந்து காந்தி பூங்கா வரை ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர். Read more

யாழ்ப்பாணம் – வரணி பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பிச்சென்ற  கனரக வாகனம் மீது கொடிகாமம் பொலிஸார்  செவ்வாய்க்கிழமை (20) அதிகாலை 1 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். எழுதுமட்டுவாள் பகுதியில் கடமையிலிருந்த கொடிகாமம் பொலிஸார், பளை பகுதியில் இருந்து சட்டவிரோத மணல் உடன் சென்ற  கனரக வாகனத்தை நிறுத்தியுள்ளனர். எனினும், கனரக வாகனம் நிறுத்தாது கொடிகாமம் பகுதியை நோக்கி தப்பி சென்றுள்ளது. Read more