Header image alt text

ஆனையிறவு   உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி  வியாழக்கிழமை (22)  ஒன்பதாவது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில்   யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு, வியாழக்கிழமை (22) மாலை சென்று முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர். Read more

தொல்பொருள் திணைக்களத்தில் கடந்த 08 ஆண்டுகளாக நிலவும் 27 உதவிப் பணிப்பாளர் வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களை இணைத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரச சேவைக்கான ஆட்சேர்ப்புகளை மீளாய்வு செய்வதற்கான குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. தொல்பொருள் திணைக்களத்தின் பிராந்திய நிர்வாக நடவடிக்கைகள் உள்ளிட்ட சேவைகளை செயற்றிறனுடன் முன்னெடுப்பதில் தடைகள் காணப்பட்டதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் துசித மென்டிஸ் தெரிவித்தார். Read more

வௌிநாடுகளில் தலைமறைவாகியுள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை சேர்ந்த 20 பேரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது. அவர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரால் ஏற்கனவே சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார். குறித்த 20 பேரும் தலைமறைவாகியுள்ள நாடுகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். Read more